ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு
ஆப்பக்கூடல் அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்கப்பட்டது
ஈரோடு
ஆப்பக்கூடல் அருகே கவுண்டம்பாளையம் திருச்சிகாரர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 100 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 30 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக பறந்து வந்த ஆண் மயில் ஒன்று எதிர்பாராதவிதமாக தோட்டத்து கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் நிலைய அதிகாரி பழனிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட ஆண் மயில், அந்தியூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த மயிலை வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story