அறச்சலூர் அருகேவெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை


அறச்சலூர் அருகேவெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை
x

அறச்சலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனா்.

ஈரோடு

அறச்சலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்

அறச்சலூர் அருகே தம்பிரான் வலசு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் விஷம் குடித்தார். உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

தனியார் நிறுவன ஊழியர்

இதேபோல் அறச்சலூரை அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள நல்லாதொழுவு பகுதியை சேர்ந்தவர் பவுத்திரம். இறந்துவிட்டார். இவருடைய மகன் கோகுல்ராஜ் (26). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டின் குளியல் அறையில் துண்டால் தூக்குப்போட்டு கோகுல் ராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக மணிகண்டன், கோகுல்ராஜ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story