அறச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பாலம் அமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
அறச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பாலம் அமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்
அறச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் பாலம் அமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
அறச்சலூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் சென்னசமுத்திரம் பகிர்மான பிரிவில் முறைகேடாக தென்னமரங்களை குறுக்கே போட்டு தண்ணீர் எடுப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து விவசாயிகள் நேற்று அங்கு ஒன்று கூடி, போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், சிவாச்சலபதி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், சென்ன சமுத்திரம் பிரிவு வாய்க்காலில் இன்றுதான் (அதாவது நேற்று) சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தது. தற்போது பாசனத்துக்காக முழுவதுமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்தான் தென்னைமரங்களை வைத்து தடுத்துள்ளனர் என்று கூறினர்.
தற்காலிக பாலம்
அதைக்கேட்ட விவசாயிகள், கிளை வாய்க்காலில் அமைந்திருந்த மதகுபாலத்தை தகர்த்ததால் கசிவுநீர் எங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. மேலும் நாங்கள் தோட்டத்திற்கு செல்ல பாலம் இல்லாததால் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்கிறோம். எனவே எங்களுக்கு ஏற்கனவே இருந்ததுபோல் குமிழி மதகு மற்றும் பாலம் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு அதிகாரிகள் உடனடியாக பாலம் அமைத்து தர முடியாது. தற்காலிக பாலத்தை நாளை (இன்று) அமைத்து தருகிறோம். தண்ணீர் நிறுத்தப்பட்ட உடன். உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர்.