ஆறுமுகநேரி அருகேசூதாடிய 8 பேர் சிக்கினர்
ஆறுமுகநேரி அருகே சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகேயுள்ள சினந்தோப்பு காட்டுப் பகுதியில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கே காட்டுப் பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.36,100-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிக்கிய காயல்பட்டினம் தர்மலிங்கம் மகன் சுயம்புலிங்கம், பாரூக் மகன் சாமு சிராபுதின், காசிம் மகன் செய்யது, பாதுல் அஸ்ஹாப் மகன் தக்கியா சாகிப், சையது முகமது மகன் சாகுல் ஹமீது, காயாமொழி கந்தசாமிபுரம் துரைசாமி மகன் பாலகிருஷ்ணன், ஆத்தூர் தலைவன்வடலி பாண்டியன் மகன் முத்துலிங்கம், பரமன்குறிச்சி கூழபெரியவன்விளை பழவேசம் மகன் சுயம்புலிங்கம் ஆகிய 8 ேபரை கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 6 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.