ஆறுமுகநேரி அருகே புன்னக்காயலில் தொல்லியல் துறையினர் ஆய்வு


ஆறுமுகநேரி அருகே  புன்னக்காயலில் தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே புன்னக்காயலில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே புன்னக்காயலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழமையான செப்பு காசுகள் கண்டெடுக்கப்பட்டது.

தமிழ் அச்சுக்கூடம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே புன்னக்காயல் பகுதி உள்ளது. இங்கு தென் கடலோர பகுதிகளில் 1586-ம் ஆண்டுகளில் தமிழ் அச்சுக்கூடம் இருந்ததாகவும், அங்கு அச்சிடப்பட்ட அடிகளார் வரலாறு என்ற புத்தகம் 699 பக்கங்களுடன் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் ஊர்கமிட்டியினர் கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில் தூத்துக்குடிக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும் கோரிக்கை வைத்தனர்.

தொல்லியல் துறையினர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று மதுரை தொல்லியல் துறை அலுவலர் ஆசை தம்பி தலைமையிலான குழுவினர் புன்னக்காயல் வந்தனர். அவர்களை பங்கு தந்தை பிராங்கிளின் பெர்னான்டோ, ஊர் தலைவர் எடிசன் ெபர்னான்டோ உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து தொல்லியல் துறையினர் அச்சுக்கூடம் இருந்ததாக கூறப்படும் ஊரின் தென்பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு மணலை தோண்டி பார்த்தபோது, சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய செப்பு காசுகள் இருந்தன. அதுபோல் 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகளும் கிடைத்தது.

அகழாய்வு நடத்த கோரிக்கை

இதையடுத்து இந்த பகுதியில் அகழாய்வு பணியை தொல்லியல் துறையினர் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட செப்பு காசுகள் மற்றும் ஆதாரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

---------------


Next Story