ஆறுமுகநேரி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் சாலை மறியல்


ஆறுமுகநேரி அருகே  அடுத்தடுத்து 2 இடங்களில் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தத. இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போகா்குவவத்து பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

ஆறுமுகநேரி இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் தண்ணீர் பந்தல் பாலம் அருகில் நேற்று முன்தினம் மாலையில் தனியார் பஸ் மோதிய விபத்தில் தலைவன்வடலியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்( வயது 22) பலியானார். இதுகுறித்து குரும்பூர் போலீார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் கார்த்திக் உறவினர்கள் மற்றும் தலைவன்வடலி கிராம மக்கள், திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின்ரோட்டில் தலைவன்வடலி விலக்கில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்தில் இறந்த கார்த்திக் குடும்பத்திற்கு தனியார் பஸ் நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்தநிலையில் தூத்துக்குடியிலிருந்து வந்த வாகனங்கள் முக்காணி ரவுண்டானாவில் இருந்து ஏரல், குரும்பூர் வழியாக திருப்பி விடப்பட்டன. திருச்செந்தூரில் இருந்து வந்த வாகனங்கள் குரும்பூர், ஏரல், முக்காணி ரவுண்டானா வழியாக இயக்கப்பட்டன. சம்மந்தப்பட்ட தனியார் பஸ் நிறுவன உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினா். இதனால் அந்த சாலையில் காலை 10 மணி வரை, அதாவது அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மற்றொரு போராட்டம்

இச்சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் காயல்பட்டினம் பைபாஸ் ரோடு உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த 9-ந் தேதி அப்பகுதியை ேசர்ந்த 3 பேர் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்து விசாரணை நடத்த வேண்டும், அந்த பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து முறையாக விாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் காலை 10.35 மணி முதல் 11.05 மணி வரை சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அடுத்தடுத்து நடந்த 2 சாலை மறியல் போராட்டங்களில் நேற்று தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story