ஆசனூர் அருகே 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்பு
ஆசனூர் அருகே 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதி பழைய ஆசனூர். இங்குள்ள சாலையில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து கிடந்தது.
உடனே இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆசனூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சாலையில் படுத்துக்கிடந்த பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை பாதுகாப்பாக அடா்ந்த வனப்பகுதியில் விட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire