ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழி மறித்த யானை


ஆசனூர் அருகே  கரும்பு லாரியை வழி மறித்த யானை
x

ஆசனூர் அருகே கரும்பு லாரியை யானை வழி மறித்தது.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது. அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை அந்த யானை திடீரென வழி மறித்தது.

யானையை கண்டதும் டிரைவர் அதிர்ச்சி அடைந்து லாரியை நிறுத்தினார். உடனே லாரியில் இருந்த கரும்பை யானை துதிக்கையால் பிடுங்கி தின்றது. இதன்காரணமாக அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் டிரைவா் நைசாக லாரியின் மீது ஏறி அதில் இருந்த கரும்பை பிடுங்கி சாலையோரத்தில் தூக்கி எறிந்தார். இதையடுத்து சாலையோரத்தில் வீசப்பட்ட கரும்பை யானை தின்ன தொடங்கியது. உடனே டிரைவர் லாரியை அங்கிருந்து எடுத்து சென்றார். இதைத்தொடர்ந்து வானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின. இதன்காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story