ஆசனூர் அருகே கரும்பு ஏற்றி வந்த லாரியை குட்டியுடன் வழி மறித்த யானை


ஆசனூர் அருகே    கரும்பு ஏற்றி வந்த லாரியை குட்டியுடன் வழி மறித்த யானை
x

லாரியை வழி மறித்த யானை

ஈரோடு

தாளவாடி அருகே உள்ள ஆசனூர்-காரப்பள்ளம் ரோட்டில் குட்டியுடன் யானை உலா வந்தது. பின்னர் ரோட்டில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு் லாரி ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

லாரியை பார்த்ததும் தாய் யானை அதை நோக்கி ஓடி சென்றது. குட்டி யானையும் ஓடிச்சென்று தாய் யானை அருகே நின்று கொண்டது. சாலையில் லாரியை வழிமறித்தபடி குட்டியுடன் யானை நின்று கொண்டு இருப்பதை டிரைவர் பார்த்தார். உடனே அவர் லாரியை சற்று ரோட்டோரம் நிறுத்தினார்.

பின்னர் லாரியில் இருந்த கரும்பை தாய் யானை துதிக்கையால் இழுத்து எடுத்து சுவைக்க தொடங்கியது. மேலும் சில கரும்புகளையும் இழுத்து கீழே போட்டது. அதை குட்டி யானை எடுத்து தின்றது.

இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்திக்கொண்டனர். இதனால் டிரைவர் லாரியின் மீது ஏறி கரும்புகளை எடுத்து சாலை ஓரத்தில் தூக்கி வீசினார். அதன்பின்னர் ரோட்டோரம் சென்று யானை குட்டியுடன் அந்த கரும்பை தின்றது. பின்னர் டிரைவர் லாரியை அங்கிருந்து ஓட்டி சென்றார். இதனால் ஆசனூர்-காரப்பள்ளம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story