ஆசனூர் அருகே நடுரோட்டில் குட்டிகளுடன் நின்றுவாகனங்களை வழிமறித்த காட்டு யானை


ஆசனூர் அருகே நடுரோட்டில் குட்டிகளுடன் நின்றுவாகனங்களை வழிமறித்த காட்டு யானை
x

ஆசனூர் அருகே நடுரோட்டில் குட்டிகளுடன் நின்று காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது

ஈரோடு

ஆசனூர் அருகே நடுரோட்டில் குட்டிகளுடன் நின்று வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யானைகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 10 வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதில் ஆசனூர் வனச்சரகத்தில் யானைகள் அதிகம் காணப்படுகின்றன. இவை அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள சாலையை கடந்து சென்று வருகின்றன.

அதேபோல் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து உணவு தேடி 2 குட்டிகளும், அதன் தாய் யானையும் நேற்று மாலை வெளியேறின. பின்னர் இவை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காரப்பள்ளம் அருகே வந்து நின்றன. காட்டு யானைகளை பார்த்ததும் வாகனங்களில் வந்தவர்கள் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தினார்கள்.

வாகனங்களை வழிமறித்த யானைகள்

அதன்பின்னர் யானைகள் நடுரோட்டில் வாகனங்களை வழிமறித்தபடி நின்றன. அப்போது ஒரு சிலர் யானைகளை கடந்து வாகனங்களில் செல்ல முயன்றனர். அவர்களை யானைகள் துரத்தின. மேலும் பலர் தங்கள் வாகனங்களில் இருந்தபடியே செல்போன்கள் மூலம் யானைகளை படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக யானைகள் நடுரோட்டிலேயே நின்றன. இதனால் அந்த வழியாக கார், பஸ், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையில் ஏராளமான வாகனங்கள் சென்றன.

அச்சம்

இந்த நிலையில் யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டன. மிகுந்த அச்சத்துடன் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கினர். யானைகளால் ஆசனூர் காரப்பள்ளம் அருகே உள்ள ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து நேற்று மாலை வெளியேறிய காட்டு யானை காரப்பள்ளம் அருகே ரோட்டில் சுற்றித்திரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரோட்டோரம் உலாவிய சிறிது நேரத்துக்கு பிறகு காட்டு்க்குள் யானை சென்றது.


Next Story