ஆத்தூர் அருகேகாரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது


ஆத்தூர் அருகேகாரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே காரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தெற்கு ஆத்தூர் நரசன்விளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காருடன் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஆத்தூர் சேர்ந்த பூமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் செல்வம் (எ) முத்து செல்வகுமார் (வயது 31), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த ராமர் மகன் அழகுமுத்து (21), பழையகாயல் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சரவணன் (27) ஆகியோர் என்பதும் அவர்கள் காரில் வைத்து கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. உடனடியாக காரை போலீசார் சோதனை நடத்தி, அதில் இருந்த 150கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், அழகுமுத்து, சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். ்அவர்கள் கஞ்சாவிற்பனைக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story