ஆவினங்குடி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கல்; 3 கடைகளுக்கு 'சீல்'


ஆவினங்குடி அருகே  புகையிலை பொருட்கள் பதுக்கல்; 3 கடைகளுக்கு சீல்
x

ஆவினங்குடி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியது தொடா்பாக 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கடலூர்

ராமநத்தம்,

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மடக்கி சோதனை செய்த போது அதில் ரகசிய அறை அமைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பெண்ணாடம் அடுத்த அருகேரி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(35), தெய்வமணி(25), ஆரோக்கியசாமி(33) என்பதும், மகேந்திரன் தனது மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அருகில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமையில் ஆவினங்குடி போலீசார் மகேந்திரன் மளிகை கடைக்கு சென்று அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் அதே ஊரில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் மளிகை கடையையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் மேலூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த சாகுல் ஹமீது மகன் அமானுல்லா (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரது கடையில் இருந்த 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அப்போது திட்டக்குடி தேர்தல் துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், ஆவினங்குடி சப்-இன்ஸ்பெக்டர் அயோத்தி ராமன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்


Next Story