பவானிசாகர் அருகே 2 கார்கள் மோதி விபத்து


பவானிசாகர் அருகே 2 கார்கள் மோதி விபத்து
x

பவானிசாகர் அருகே 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

ஈரோடு

பவானிசாகர்

நீலகிரி மாவட்டம் மைனாரை கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் தன்னுடைய காரில் குடும்பத்துடன் ஊட்டியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள சிங்கிரிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார். கேரளா மாநிலம் குண்டலியூர் கிராமத்தை சேர்ந்தவர் நவால்னா (37). இவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சிவக்குமாரின் காரும், நவால்னாவின் காரும் பவானிசாகர் அருகே சீரங்கன் வனப்பகுதியில் சென்றபோது எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி உருண்டன. இந்த விபத்தில் ஒரு காரில் பயணம் செய்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story