பவானிசாகர் அருகே எறும்புதின்னி ஓடுகள் வைத்திருந்த 3 பேர் கைது
3 பேர் கைது
பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அப்போது காராச்சிகொரை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் ஒரு பை இருந்தது. அதை வனத்துறையினர் வாங்கி சோதனை செய்து பார்த்தார்கள். பையில் ஒரு ஒலிபெருக்கி பெட்டி இருந்தது. அதற்குள் எறும்பு தின்னி ஓடுகள் இருந்தன. இதனால் வனத்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள்
தெங்குமரஹடா அருகே உள்ள அல்லிமாயாரை சேர்ந்த சிவக்குமார் (வயது 34), கோபால் (45) சிறியூர் பகுதியை சேர்ந்த அருண் (28) ஆகியோர் என்றும், 3 பேரும் எறும்புதின்னி ஓடுகளை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் எறும்பு தின்னி ஓடுகளை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தார்கள். மேலும் அவர்களுக்கு எறும்பு தின்னி ஓடுகள் எப்படி கிடைத்தன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.