பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு


பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்பு
x

பவானிசாகர் அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவன் பிணமாக மீட்கப்பட்டாா்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கிரசர்மேட்டை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன்கள் யாகேஷன் (வயது 13), சபரீசன் (11). இதில் யாகேஷன் கோடேபாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் குமார் தன்னுடைய 2 மகன்களையும் அழைத்து கொண்டு அருகே அணைத்துறை பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு யாகேஷன் ெசன்றுவிட்டார். இதில் அவர் ஆற்றில் மூழ்கினார். இதை கண்டதும் குமார் விரைந்து சென்று யாகேஷனை காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதில் ஆற்றில் மூழ்கி யாகேஷன் இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அம்மாசை, தலைமை காவலர் சண்முகம் மற்றும் போலீசார், சத்தியமங்கலம் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடினர். இருட்டிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது ெதாட்டம்பாளையம் பகுதியில் யாகேஷன் பிணமாக மீட்கப்பட்டார். யாகேஷனின் உடலை கண்டதும், அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து யாகேஷனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story