பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


பவானிசாகர் அருகே   தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 4 Oct 2022 2:17 AM IST (Updated: 4 Oct 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள காராச்சிகொரை கிராமத்தைச் சேர்ந்தவர் எழில். விவசாயி. இவர் தன்னுடைய தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இது தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை வெளியேறியது. பின்னர் யானை எழிலின் வாழை தோட்டத்தில் புகுந்து வாழைகளை மிதித்து நாசம் செய்தது.

சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த எழில் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் அங்கு வந்து சத்தமிட்டும், தீப்பந்தம் கொளுத்தியும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் யானை காட்டுக்குள் சென்றது.


Next Story