பவானி அருகே அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த நாகப்பாம்பு தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்


பவானி அருகே  அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த நாகப்பாம்பு  தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்
x

நாகப்பாம்பு

ஈரோடு

பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்குள் நேற்று மாலை 6 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. உடனே அந்த பாம்பு அங்குள்ள நிலத்தடி நீர் தொட்டியில் பதுங்கியது. ஆனால் அந்த பாம்பு நிலத்தடி நீர் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தது. இதை கண்டதும் அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு நிலைய வீரர் தங்கராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் மீட்கப்பட்ட பாம்பானது அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.


Next Story