போடி அருகேகாட்டெருமை தாக்கி விவசாயி சாவு:பெண் தொழிலாளி காயம்
போடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தேனி
போடி அருகே உள்ள முந்தல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 37). விவசாயி. இவரது தோட்டம் அதே பகுதியில் உள்ளது. நேற்று காலை இவர், தனது தோட்டத்தில் வேலை செய்வதற்காக ராணி என்ற பெண் தொழிலாளியுடன் மோட்டார்சைக்கிளில் குரங்கணி அருகே உள்ள பிச்சாங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென ஓடி வந்து அவர்களை தாக்கியது.
இதில் காட்டெருமை தாக்கியதில் ஈஸ்வரன் வயிற்று பகுதியில் இருந்து குடல்கள் வெளியே வந்தன. மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ராணி லேசான காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் ஈஸ்வரனை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story