போடி அருகே பஸ்சில் இருந்து கழன்று ஓடிய டயர்:பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
போடி அருகே பஸ்சில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி
தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி போடியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று காலை போடியில் இருந்து வீரபாண்டிக்கு சிறப்பு பஸ் சென்றது. பின்னர் அந்த பஸ் அங்கிருந்து போடிக்கு வந்து கொண்டிருந்தது. போடி- தேனி சாலையில் மீனா விலக்கு அருகே சென்றபோது பஸ்சின் வலதுபுறத்தில் உள்ள முன்பக்க டயர் திடீரென கழன்று ஓடியது. இதைக்கண்டதும் சுதாரித்து கொண்ட டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார்.
இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் மற்றொரு பஸ்சில் ஏறி போடிக்கு சென்றனர். அரசு பஸ்களை சரிவர பராமரிப்பு செய்யாமல் தொடர்ந்து இயக்கப்படுவதால் விபத்து ஏற்படுவதாக பயணிகள் கூறினர். எனவே அரசு பஸ்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story