போடி அருகேகாட்டெருமை தாக்கி தொழிலாளி பலி
போடி அருகே காட்டெருமை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தேனி
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுபட்டியை சேர்ந்தவர் சுருளி ராஜன் (வயது 42). இவர், போடி அருகே வலசைத்துறை காட்டு புலம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவரது மாந்தோப்பில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை இவர், வீட்டில் இருந்து வெளியே வந்து நின்று கொண்டிருந்தார். அப்ேபாது அங்கு வந்த காட்டெருமை ஒன்று எதிர்பாராதவிதமாக அவரை முட்டி தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி குரங்கணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story