புதூர் அருகேமழைக்கு சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிதியுதவி


புதூர் அருகேமழைக்கு சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிதியுதவி
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 2:14 PM IST)
t-max-icont-min-icon

புதூர் அருகே மழைக்கு சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

புதூர் யூனியன் லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 29-ஆம் தேதி சூரை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. அந்த வீடுகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசின் நிவாரண நிதி மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஆண்டாள், புதூர் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story