கேர்மாளம் அருகே ரோட்டில் நடமாடிய ஒற்றை யானை


கேர்மாளம் அருகே ரோட்டில் நடமாடிய ஒற்றை யானை
x

கேர்மாளம் அருகே ரோட்டில் நடமாடிய ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகாலுக்கு தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் பஸ் மாலையில் கேர்மாளம் அருகே வனச்சாலையில் சென்றபோது நடுரோட்டில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.

இதனால் டிரைவர் பயந்து பஸ்சை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டார். பஸ்சில் இருந்து பயணிகள் யாரும் கீழே இறங்கவில்லை. உள்ளேயே உட்கார்ந்து யானையை வேடிக்கை பார்த்தனர். யானை ரோட்டில் அங்கும், இங்குமாக நடமாடி கொண்டிருந்தது. இதனை ஒரு சிலர் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். திடீரென யானை பஸ்சை துரத்த தொடங்கியது. இதனால் பயணிகள் அச்சமடைந்து, 'அய்யோ, அம்மா' என்று கூச்சலிட்டனர். இதனால் டிரைவர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சுமார் 20 நிமிடங்களாக அங்கு சுற்றி திரிந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். பஸ் அங்கிருந்து சென்றது.

யானையால் கேர்மாளம் அருகே வனச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story