சின்னசேலம் அருகே ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி


சின்னசேலம் அருகே  ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நயினார்பாளையம், மேல்நாரியப்பனூர் மற்றும் சமத்துபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்தசோகையை விளக்கி நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story