சித்தோடு அருகே4 ஆடுகளை கடித்து கொன்ற நாய்


சித்தோடு அருகே4 ஆடுகளை கடித்து கொன்ற நாய்
x
தினத்தந்தி 16 April 2023 2:58 AM IST (Updated: 16 April 2023 2:59 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு அருகே 4 ஆடுகளை நாய் கடித்து கொன்றது.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே உள்ள குட்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் வீட்டின் அருகிலேயே பட்டி அமைத்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை செந்தில், பட்டிக்கு சென்று பார்த்தபோது 2 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தன. மேலும் 2 ஆடுகள் உடலில் காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தன. இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு செந்தில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அந்த பகுதியில் அமைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நாய் ஒன்று செந்திலின் பட்டியில் இருந்து வெளியேறுவது தெரிந்தது. அதனால் ஆடுகளை கொன்றது நாய் தான் என்பது உறுதியானது. இந்தநிலையில் படுகாயம் அடைந்த மேலும் 2 ஆடுகளும் இறந்தன. இதைத்தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள், ஆடுகளை கொல்லும் நாயை உடனே பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story