சித்தோடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


சித்தோடு அருகே  பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Dec 2022 3:09 AM IST (Updated: 16 Dec 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

சித்தோடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு

பவானி

சித்தோடு அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை

சித்தோடு அருகே உள்ள நசியனூர் கதிரம்பட்டி நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மூத்த மகள் ஸ்ரீநிதி (வயது 16). இவர் நசியனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. தாயுடன் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீநிதியின் தாய் கடைக்கு சென்றுவிட்டார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது ஸ்ரீநிதி மின்விசிறி கொக்கியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

விசாரணை

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீநிதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story