கூடலூர் அருகேபுதர்மண்டி காணப்படும் வாய்க்கால்கள்


கூடலூர் அருகேபுதர்மண்டி காணப்படும் வாய்க்கால்கள்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வாய்க்கால்கள் புதர்மண்டி காணப்படுகிறது.

தேனி

முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கூடலூர் அருகே லோயர்கேம்ப் வைரவன் வாய்க்கால் முதல் சட்ரஸ் பகுதி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முல்லைப்பெரியாற்றின் கரை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும் தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.

இதன் காரணமாக தண்ணீர் வரும் பாதை சுருங்கிகொண்டே வருகிறது. எனவே ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. குறிப்பாக வயல்வெளிகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்களான பொட்டிவாய்க்கால் பாலம், சாமி வாய்க்கால், வைரவன் வாய்க்கால், தாமரைகுளம் வாய்க்கால், பாரவந்தான், ஒழுகுவழிபுலம், சட்ரஸ் உள்ளிட்ட வாய்க்கால்களில் செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் அதிகம் வளர்ந்து தண்ணீர் வரும் பாதையை அடைத்துள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) முதல் போக நெல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடலூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story