கூடலூர் அருகேகூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு


கூடலூர் அருகேகூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருேக கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தேனி

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ரூ.1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்காக புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக தேனி மாவட்டம் கூடலூர் குருவனூற்றுப்பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டி அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல மதுரை மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை மதுரை மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி தலைமையில் மதுரை மாநகராட்சி பொறியாளர் அன்பழகன், உத்தமபாளையம் செயற்பொறியாளர் அன்புச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கூடலூர் சலவை தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர், அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று மீண்டும் புதிய மனு கொடுத்தனர்.

அப்போது முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதை நிறுத்தியவுடன் முதல்கட்டமாக படித்துறை கட்டித் தரப்படும். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதைத்தொடர்ந்து சலவை தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே சலவை தொழிலாளர்கள் மறியலில் ஈடுபடபோகிறாா்கள் என்று கருதி கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story