தேவதானப்பட்டி அருகே ஆட்டோ-ஆம்புலன்ஸ் மோதல்:7 பேர் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே ஆம்புலன்ஸ் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 34). 108 ஆம்புலன்ஸ் டிரைவர். நேற்று இவர், பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டிக்கு நோயாளியை ஏற்றி வர ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்தார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் காட்ரோடு போலீஸ் சோதனை சாவடி அருகே சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் மீது மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த பெரியகுளத்தை சேர்ந்த கவுதம் (18), ஜீவா (25), முத்துப்பாண்டி (30), விக்னேஷ் (19), சுப்புராம் (25), பிரேம்குமார் (25), டிரைவர் சந்திரசேகரன் (25) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் சந்திரசேகரன் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.