திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது


திண்டுக்கல் அருகே  புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது
x

திண்டுக்கல் அருகே புகையிலை பொருட்கள் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்


திண்டுக்கல்லை அடுத்த பிஸ்மிநகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது ஜாகிர் உசேன் (வயது 51) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகிர் உசேனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.



Next Story