ஈரோடு சோதனைச்சாவடி அருகில் கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் இடமாற்றம்


ஈரோடு சோதனைச்சாவடி அருகில்   கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் இடமாற்றம்
x

ஈரோடு சோதனைச்சாவடி அருகில் கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட்டில் கடல் மீன்கள் மற்றும் அணையில் பிடிபடும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இங்கு வந்து மீன்கள் வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில், காவிரி ரோட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மீன் மார்க்கெட்டினை இடம் மாற்ற செய்ய நெடுஞ்சாலைத்துறையினரும், மாநகராட்சி நிர்வாகமும் வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து காவிரி ரோட்டில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட், நேற்று முதல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட தொடங்கியது. சாலை மேம்பாட்டு பணி நிறைவடையும் வரை மீன் மார்க்கெட், சோதனைச்சாவடி அருகில் நடைபெறும் என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'காவிரி ரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்ததால் எங்களுக்கு மிகவும் சவுகரியமாக இருந்து வந்தது. தற்போது சோதனைச்சாவடி அருகே கொண்டு செல்லப்பட்டதால் நாங்கள் அதிக தூரம் சென்று மீன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாலை பணிகளை விரைந்து முடித்து, மீன் மார்க்கெட் மீண்டும் காவிரி ரோட்டில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story