ஈரோடு அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி


ஈரோடு அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
x

ஈரோடு அருகே தந்தை கண் முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு

சோலார்

ஈரோடு அருகே தந்தை கண் முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவர்

ஈரோட்டை அடுத்த சோலார் அருகே உள்ள புஞ்சை லக்காபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கரட்டாங்காடு அண்ணாச்சி கடை வீதியை சேர்ந்தவர் செல்வம். தறிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மகன் புவனேஷ் (வயது 17). இவர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அங்குள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் புவனேசுக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு கரட்டாங்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்து இருந்தார்.

பலி

கடந்த 3 நாட்களாக செல்வம், அவருடைய மகன் புவனேஷ் ஆகியோர் சோலார் அருகே பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் காலை நேரத்தில் குளித்து வந்தனர். அதன்படி நேற்றும் வழக்கம்போல் காலை 8 மணிக்கு செல்வமும், புவனேசும் காவிரி ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது புவனேஷ் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். இதில் அவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேசின் உடலை மீட்டனர். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு புவனேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை கண் முன்னே மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story