எட்டயபுரம் அருகேகோவில்களில் உழவாரப் பணி
எட்டயபுரம் அருகே கோவில்களில் உழவாரப் பணி நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் கிராமத்தில் பவானிசாகர் கோவில் மற்றும் கீழநம்பிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் "அடியவர்களுக்கெல்லாம் அடியவர்கள்" என்ற உழவாரப்பணி குழுவினர் உழவாரப்பணி செய்தனர். ஆண்கள், பெண்கள் என சுமார் 70-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.
கோவில்களில் கருவறையில் உள்ள சுவாமி சிலைகள் உட்பட அனைத்து சிலைகளையும் சுத்தம் செய்து கோவில் வளாகம் முழுவதிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். தங்களது பணிகளை முடித்த பின் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.
Related Tags :
Next Story