எட்டயபுரம் அருகேதடுப்புச்சுவரில் கார் மோதி9-ம் வகுப்பு மாணவி சாவு


தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி பலியானார். திருச்செந்தூர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

திருச்செந்தூர் கோவிலுக்கு...

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ெமாத்தம் 6 பேருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவில் புறப்பட்டார். காரை சிங்கம்புணரியைச் சேர்ந்த டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டினார்.

அவர்கள் வந்த கார் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் சிந்தலக்கரை அருகில் வந்து கொண்டு இருந்தது.

மாணவி பலி

அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த மணியின் மகளான 9-ம் வகுப்பு மாணவி கயல்விழி (வயது 14) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் இருந்த பிரபா, டிரைவர் பாண்டி ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து உடனடியாக எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எட்டயபுரம் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

----------


Next Story