எட்டயபுரம் அருகே திருமாங்கல்யத்தை தவறவிட்ட பெண்
எட்டயபுரம் அருகே பெண் ஒருவர் தவறவிட்ட திருமாங்கல்யத்தை இரண்டு வாலிபர்கள் மீட்டு ஒப்படைத்தனர். அந்த வாலிபர்களை போலீசார் பாராட்டினர்.
எட்டயபுரம்:
கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்த பெரியசாமி மனைவி மகாலட்சுமி (வயது 40). இவர் எட்டயபுரம் அருகே கீழஈராலில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 5-ந் தேதி அரசு பஸ்சில் கோவில்பட்டியிலிருந்து கீழ ஈராலுக்கு வேலைக்கு சென்றார். பஸ்சிலிருந்து இறங்கி பள்ளிக்கு சென்றபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த திருமாங்கல்யம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேடிப்பார்த்தபோது, திருமாங்கல்யம் கிடைக்கவில்லை. இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கீழஈரால் சாலையோரத்தில் திருமாங்கல்யம் கிடந்ததாக கூறி அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களான அரவிந்த், மாரிச் செல்வம் ஆகியோர் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமதுவிடம் ஒப்படைத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட அவர், மகாலட்சுமியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து அந்த வாலிபர்கள் மூலம் ஒப்படைத்தார். அந்த வாலிபர்களுக்கும், போலீசாருக்கும் அந்த பெண் நன்றி தெரிவித்து கொண்டார். அந்த மாங்கல்யத்தை ஒப்படைத்த வாலிபர்களை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் சப்- இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.