கயத்தாறு அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது


கயத்தாறு அருகே  பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் ராம்தாஸ் நகர் காலனியில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் ஆக்னல் (வயது 30). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் பாஸ்கர் (27). இருவரும் ஆக்னல் தாயார் அனிதாவிடம் குடும்ப பிரச்சினை காரணமாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அனிதாவையும், தடுக்க வந்த உறவினர் மகேஷ்குமார் என்பவரையும் கம்பால் ஆக்னலும், பாஸ்கரும் தாக்கினராம். இதில் காயமடைந்த அனிதாவும், மகேஷ்குமாரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் கயத்தாறு ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்குப்பதிவு செய்து ஆக்னல், பாஸ்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

---------


Next Story