கயத்தாறு அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி


கயத்தாறு அருகே  டிராக்டரில் இருந்து தவறி   விழுந்த   சிறுவன் பலி
x

கயத்தாறு அருகேடிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியானான்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே ஓலைகுளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. விவசாயி. இவரது மகன் கவுதம்(வயது 12). இவன் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் 2 மணி அளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பாண்டி மகன் மகாராஜன் டிராக்டர் மூலம் டேங்கில் தண்ணீர் பிடித்து குளத்திற்குள் இருந்து வெளியே ஓட்டி வந்தார். அந்த டிராக்டரின் மேல் காளிராஜ், விஷ்ணு, கவின், கார்த்திக், ஆகிய 5 பேர் உட்கார்ந்திருந்தனர். எதிர்பாராதவிதமாக கவுதம் தடுமாறி கீழே விழுந்தான். கண் இமைக்கும் நேரத்தில் டிராக்டர் அவனது உடல் மேல் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story