கயத்தாறு அருகேலாரிடிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
கயத்தாறு அருகே லாரிடிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்து சூரியமிணிக்கன் கிராமத்தில் அம்மன் கோவில் தெரு முருகன், மகன் ராஜ்குமார் (வயது 27). லாரி டிரைவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவு வீட்டுக்கு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினர். அப்போது ஊருக்கு அருகிலுள்ள அவரது தோட்டத்திலுள்ள தேக்கு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று, தூக்கில் தொங்கி கொண்டிருந்த ராஜ்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.