கயத்தாறு அருகேபோலீஸ்காரரின் மகன் அடித்துக் கொலை?:குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை


கயத்தாறு அருகேபோலீஸ்காரரின் மகன் அடித்துக் கொலை?:குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே போலீஸ்காரரின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற ேபாலீஸ்காரர். இவரது மகன் செல்வக்குமார் (43), கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா, சுபாஷினி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

பிணமாக கிடந்தார்

செல்வக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்டது.

நேற்று அதிகாைலயில் வீட்டு மொட்டை மாடியில் செல்வக்குமார் திடீரென்று இறந்து கிடந்தார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விரைந்தனர்

இதையடுத்து செல்வக்குமார் உடலை கீழே கொண்டு வந்து அடக்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம்பக்கத்தினர் கயத்தாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக்கொலையா?

செல்வக்குமாரை யாரேனும் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர நடத்தி வருகிறார்கள்.

மேலும் சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story