கயத்தாறு அருகேஇளம்பெண்ணை மானபங்க முயற்சி
கயத்தாறு அருகே இளம்பெண்ணை மானபங்க முயற்சி செய்துவிட்டு தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்யு முயன்றுவிட்டு, தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்
கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடியை சேர்ந்த ராமர் மகன் முத்துமாடன்(வயது30). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே ஊரை ேசர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் அம்மன் கோவில் அருகே உள்ள ஓடைப் பக்கம் கழிப்பறைக்கு சென்றுள்ளார். இருளில் மறைந்தவாறு முத்துமாடன் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
மானபங்க முயற்சி
ஒதுக்குப்புறமான இடத்தில் தீடீரென்று அவரை முத்தாமடன் கட்டிப்பிடித்து மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டு கதறியுள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் திரண்டுள்ளனர். இதை கவனித்த முத்துமாடன் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தார்.
கைது
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முத்துமாடனை நேற்று இன்ஸ்பெக்டர் கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணமான இளம்பெண்ணை விவசாயி மானபங்கம் செய்ய முயன்ற சம்பவம் சன்னதுபுதுக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.