கயத்தாறு அருகேதொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
கயத்தாறு அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கயத்தாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சி பஞ்சாயத்தை சேர்ந்த வடக்குகோனார் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் வேலாண்டி. இவரது மகன் வீரக்குமரன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா(27). இவர்களுக்கு விஜயராஜ் என்ற மகனும், விகாஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தொடர்பாக கயத்தாறு போலீஸ் நிலையத்தில் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
மனைவியுடன் தகராறு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீரக்குமரன் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு கிராமத்தினரிடம் வாங்கி ரூ. 40 ஆயிரத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீரகுமரன் மனவேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் நள்ளிவில் வீட்டில் குழந்தை தொட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று வீரகுமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.