கோபி அருகேமோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி


கோபி அருகேமோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலி
x

கோபி அருகே மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

கல்லூரி மாணவர்

கோபி புதுச்சாமி கோவில் வீதியைச்சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மகன் சஞ்சய் குமார் (வயது 19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சஞ்சய்குமார் தனது உறவினர் தனுஸ்ரீ (19) என்பவருடன் நேற்று மதியம் சவுண்டப்பூரில் இருந்து கோபி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கரை புதூர் என்ற இடத்தில் சென்றபோது மொடச்சூரை சேர்ந்த ஜெயப்பிரசாத் (19) என்பவர் தனது தாய் உதயகுமாரியுடன் (40) ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக சஞ்சய்குமாரின் மோட்டார்சைக்கிளும், ஜெயப்பிரசாத் ஓட்டி வந்த ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சஞ்சய்குமாரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story