கச்சிராயப்பாளையம் அருகேசாராய ஊறலை அழித்த வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
கச்சிராயப்பாளையம் அருகே சாராய ஊறலை அழித்த வனத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள வனப்பதியில் சாராயம் காய்ச்சுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இந்நாடு வன சரகம் மட்டப்பாறை வனப்பிரிவு சரகர் கோதண்டராமன் தலைமையிலான வனத்துறையினர் கல்படை வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை வனத்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். இதுபற்றி அறிந்த கல்படை கிராமத்தை சார்ந்த தாகப்பிள்ளை, இவருடைய மகன் ராமச்சந்திரன், இவருடைய மகன் சந்துரு ஆகியோர் அங்கு வந்து கோதண்டராமனை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி கோதண்டராமன் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாகப்பிள்ளை உள்பட 3 பேர் மீது பேரீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.