கடமலைக்குண்டு அருகேமான் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றவர் கைது


கடமலைக்குண்டு அருகேமான் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றவர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே மான் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி

கடமலைக்குண்டு அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 54). இவர், புள்ளி மான் இறைச்சி வைத்திருப்பதாக மேகமலை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் வனத்துறையினர் கோம்பைத்தொழுவிற்கு சென்று முருகனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த குக்கரை வனத்துறையினர் சோதனை செய்தனர். அதில் வேக வைக்கப்பட்ட நிலையில் புள்ளி மான் இறைச்சி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் முருகனை மேகமலை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்த அழகுராஜா (48) என்பவரின் தோட்டத்தில் செந்நாய்கள் கடித்து புள்ளி மான் இறந்து கிடந்ததாகவும். அந்த மானின் இறைச்சியை எடுத்து அவர் தன்னிடம் கொடுத்ததாகவும் முருகன் கூறினார்.

இதையடுத்து அழகுராஜாவை கைது செய்வதற்காக வனத்துறையினர் கோம்பைத்தொழுவிற்கு சென்றனர். ஆனால் வனத்துறையினர் வருவதை அறிந்த அழகுராஜா அங்கிருந்து தலைமறைவானார். அதைத்தொடர்ந்து மான் இறைச்சிைய சமைத்து சாப்பிட முயன்றதாக முருகன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அழகுராஜாவை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story