கடம்பூா் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை தொடர் அட்டகாசம்


கடம்பூா் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை தொடர் அட்டகாசம்
x

கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானை தொடர் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானை தொடர் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

காட்டு யானை

கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக கடம்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி அந்த பகுதியில் உள்ள செங்காடு, பூதிகாடு, ஏரியூர், எக்கத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள சோளம், வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. மேலும் மாட்டு கொட்டகைகளையும் இடித்து சேதப்படுத்தி உள்ளது.

2 ஏக்கர் பரப்பளவிலான...

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் காட்டு யானை செங்காடு பகுதியில் உள்ள சோள தோட்டத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளத்தை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. பின்னர் நேற்று பகலில் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. தோட்டத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததில் 2 ஏக்கர் பரப்பளவிலான சோளப்பயிர் சேதம் அடைந்தது. காட்டு யானையின் தொடர் அட்டகாசம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே அட்டகாசம் செய்யும் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என்றனர்.


Next Story