கடம்பூர் அருகே ஒற்றை யானை அட்டகாசம்; வீட்டின் சுவரை சேதப்படுத்தியது


கடம்பூர் அருகே   ஒற்றை யானை அட்டகாசம்;  வீட்டின் சுவரை சேதப்படுத்தியது
x

கடம்பூர் அருகே வீட்டின் சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே வீட்டின் சுவரை சேதப்படுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

நாய்கள் குரைத்தன

கடம்பூரை அடுத்த கரளயம் அருகே உள்ள மாமரத்து தொட்டி நகலூரை சேர்ந்தவர் மாதப்பன். கூலித்ெதாழிலாளி. இவருடைய மனைவி மாதம்மாள். இவர்கள் அங்கு ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். மகன்கள் 2 பேரும் கரும்பு வெட்டுவதற்காக வெளியூருக்கு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் இரவு மாதப்பனும், மாதம்மாளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானையானது கரளயம் கிராமத்துக்குள் புகுந்தது. யானையை கண்டதும், அங்குள்ள தெருநாய்கள் சத்தம் போட்டு குரைத்தன.

வீடு சேதம்

நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து மாதப்பனும், அவருடைய மனைவியும் திடுக்கிட்டு எழுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது அவர்களுடைய வீட்டின் அருகே ஒற்றை யானை நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் 2 பேரும் வீட்ைட விட்டு வெளியே ஓடினர். இதையடுத்து மாதப்பன் வீட்டின் அருகே வந்து ஒற்றை யானை நின்று கொண்டது. பின்னர் வீட்டின் சுவரை யானை துதிக்கையால் அசைத்தும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது. இதில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. அப்போது சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த சம்பவத்தால் கரளயம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story