கடம்பூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டவர் கைது


கடம்பூர் அருகே   தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டவர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2022 1:00 AM IST (Updated: 13 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா செடி

ஈரோடு

கடம்பூர் அருகே உள்ள மொசல்மடுவு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கடம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது மொசல்மடுவு பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது50) என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் குச்சி கிழங்கு பயிரிட்டு அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும், மேலும் குச்சி கிழங்கு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆண்டிச்சாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரம், 60 லிட்டர் சாராய ஊறல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆண்டிச்சாமி பயிரிட்டு வளர்த்து வந்த 120 கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story