கழுகுமலை அருகேவளனார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா
கழுகுமலை அருகே வளனார் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வளனார் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. .
விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஜோசப் கென்னடி தலைமை தாங்கி பேசினார். வளனார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காசிராஜன் ஏற்புரை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்களுக்கு மாணவ, மாணவிகள் நினைவு பரிசுகள் வழங்கினர். கல்லூரி செயலாளர் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் பேராசிரியர்கள் கஸ்தூரி, அய்யனகுமார், மணிகண்டன் மற்றும் தொழிற்பயிற்சி நிலை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story