கழுகுமலை அருகேகாசநோய் கண்டறியும் முகாம்
கழுகுமலை அருகே காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
கழுகுமலை:
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பில் கழுகுமலை அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. பஞ்சாயத்து துணை தலைவர் பாஸ்கரன் முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாரிமுத்து பொது சுகாதாரம் பற்றியும், பொதுமக்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பழக்க,வழக்கங்கள் குறித்தும் பேசினார். கடம்பூர் காசநோய் பிரிவின் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன், காசநோய் அறிகுறிகள் குறித்தும், சளி பரிசோதனை செய்வதன் அவசியம் பற்றியும் விளக்கி கூறினார். தொடர்ந்து காசநோய் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காசநோய் அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி பரிசோதனை செய்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் முதுநிலை ஆய்வுகூட மேற்பார்வையாளர் தனசெல்விசோபியா, சுகாதார ஆய்வாளர் கார்த்திக், இடைநிலை சுகாதார பணியாளர்கள் தனலட்சுமி, பரணி, உஷா, சத்யகலா ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.