கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை தீ மிதி திருவிழாவுக்கு சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசை


கள்ளக்குறிச்சி அருகே  விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை  தீ மிதி திருவிழாவுக்கு சென்றிருந்தபோது மர்மநபர்கள் கைவரிசை
x

கள்ளக்குறிச்சி அருகே விவசாயி வீட்டில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புத்தந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு(வயது 48). விவசாயி. இவருடைய மனைவி பஞ்சவர்ணம். இவர்களுடைய மகன் மணிகண்டன்(20).

புத்தந்தூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் மணிகண்டன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்த இருந்தார். இதற்காக அவருடைய குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் கோவிலில் தீ மிதித்து விட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

நகை-பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அய்யாக்கண்ணு குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறந்து கிடந்தது. உடனே பீரோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை.

வீட்டில் இருந்த ஆட்கள் கோவிலுக்கு சென்றிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story