காஞ்சிக்கோவில் அருகே முயல் வேட்டையாடிய 2 பேர் கைது


காஞ்சிக்கோவில் அருகே முயல் வேட்டையாடிய 2 பேர் கைது
x

காஞ்சிக்கோவில் அருகே முயல் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு

பெருந்துறை

காஞ்சிக்கோவில் அருகே முயல் வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வாகன சோதனை

காஞ்சிக்கோவிலை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே உள்ள ஓசைப்பட்டி பகுதியில் காஞ்சிக்கோவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். சோதனையின்போது அவர்களிடம் ஏர்கன் துப்பாக்கியும், இறந்து போன முயல் ஒன்றும் இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கைது

விசாரணையில், 'அவர்கள் பெத்தாம்பாளையம் அருகே உள்ள கோமையன்வலசை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 41), பெத்தாம்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி (37) என்பதும், அவர்கள் 2 பேரும் இரவில் ஓசைப்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று ஏர்கன் துப்பாக்கியால் முயலை வேட்டையாடியதும்,' தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ஈரோடு வனத்துறையினரிடம், போலீசார் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story